(இரா.செல்வராஜா)

ஊரடங்குசட்டம் நீக்கப்பட்ட மாவட்டங்களில் உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வதாக பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்போது அரிசி, மா உள்ளிட்ட மளிகைப்பொருட்கள் அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரால் சாந்த திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

இவ்வாறான வர்த்தகர்களை கண்டுப்பிடித்து சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர்,சில பகுதிகளில் வர்த்தகர்கள் பொருட்களுக்கு செயற்கை கட்டுபாடொன்றை ஏற்படுத்தி அவற்றை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிக விலையில் விற்பனை செய்வதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருதாகவும் குறிப்பிட்டார்.