சியம்பலண்டுவ, கிவுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

20 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.

குறித்த பெண் வீட்டிலுள்ள வானொலியை ஒலிரச் செய்வதற்காக வானொலியின் வயரினை மின்னியல் பிளக் ஒன்றில் செருக முற்பட்ட போதே குறித்த பெண்ணுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சாரம் தாக்கிய பெண்ணை ஆபத்தான நிலையில் சியம்பலண்டுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.