மூக்கு ஒழுகுதல், சளி, இரத்தம் ஆகியவை பொதுவாக 100-க்கு 50 பிள்ளைகளுக்கே இருக்கும். இது ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு பொதுவாகவே காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் குழந்தை அழும் அல்லது காய்ச்சல் வரும். சில நேரத்தில் குழந்தை அமைதியாக இருக்கும்.
மூக்கு ஒழுகுதல் கசிவு நீராகவோ, இரத்தமாகவோ, சளியாகவோ இருக்கலாம். இரத்தப் போக்கு மூக்கில் இருந்தால் வேறு ஏதாவது இடத்தில் இரத்தம் வருகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். கோடையில் வறண்ட காற்று அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இப்பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் மூக்கில் தொற்று ஏற்படும். இந்தத் தொற்று காரணமாக புண் உண்டாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று எல்லா சைனசுக்கும் பரவலாம். அதேபோன்று மூக்கு ஒழுகுதல் நீராகவோ, பிசுபிசுப்புடன் ஒழுகுதல் இருந்தாலோ அது அலர்ஜி ஆகும். எனவே கவனமாகப் பரிசோதனை செய்ய வேண்டும். சில நேரங்களில் அது வைரல் தொற்றாகவும் இருக்கலாம். வைரல் தொற்றை கவனிக்காவிட்டால் அது நுரையீரலுக்கும் பரவும்.
மூக்கு, தொண்டை, நுரையீரல் சைனஸ் பகுதியை பரிசோதனை செய்வதுடன் இரத்தப் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். இரத்த உறைவு எந்த அளவு உள்ளது என்பதையும் கண்டறிய வேண்டும். இந்த சோதனையின் மூலம் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கலாம்.
டொக்டர் V.பாப்புநாதன், M.S., D.L.O.,
காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM