சமந்தா கலந்துகொண்ட விழாவில் ரசிகர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களின் திறப்பு விழாவில் அவ்வப்போது கலந்து கொண்டு வருகிறார். அதன்படி, சமீபத்தில் மதுரையில் தனியார் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட போது ரசிகர்கள் அவரை பார்க்க முண்டியடித்ததால் பொலிஸார் தடியடி நடத்தினர்.

மதுரையில் நேற்றுமுன்தினம் வீகேர் நிறுவனத்தின் 32வது கிளையை திறக்க மதுரைக்கு வருகை தந்தார். சமந்தா வருவதையறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததையடுத்து சமந்தாவின் பாதுகாப்புக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சமந்தா வந்ததும் அதிக அளவில் பொதுமக்கள் சமந்தா இருந்த மேடையை நோக்கி முன்னேறினர். இதில் மேடை தகர்ந்தது.

அப்போது, யாரோ ஒருவர் சமந்தா வந்த காரின் டயரை குத்திக் கிழித்து பஞ்சராக்கினார். ஒலிப்பெருக்கி கருவிகளும் சரியத் தொடங்கினார். இதில் சிக்கிக்கொண்ட சமந்தாவை பாதுகாவலர்கள் மீட்டு மாடிக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸார்; தடியடி நடித்தினர். பின், விழா முடிந்து சமந்தா மாற்று காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.