நேபாளத்தில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது ! குழந்தையை பிரசவித்த தாயே பலி !

By T. Saranya

17 May, 2020 | 11:41 AM
image

நேபாளத்தில் கொவிட்-19 கொரோனா வைரஸ்  முதலாவது  உயிரிழப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 8 ஆம் திகதி குழந்தையை பிரசவித்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

பின்னர், அவர் நோய்வாய்ப்பட்டு  உடல்நிலை மோசமடை துலிகேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலே உயிரிழந்துள்ளார்.

பி.சி.ஆர். பரிசோதனைகளில் இருந்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதுவே கொரோனாவுக்கு நேபாளத்தில் பதிவான முதல் உயிரிழப்பாகும்.

நேபாளத்தில் மொத்தம் 281 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அதில் 281 பேரும் குணமடைந்துள்ளார்கள்.

கடந்த டிசம்பரில் சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஐரோப்ப நாடுகளும் அமெரிக்காவும் தற்போது மிகவும் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தொற்றுநோயினால் 310,500 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள், மொத்த நோய்த்தொற்றுகள் 4.61 மில்லியனைத் தாண்டியுள்ளன.

அதே நேரத்தில் 1.66 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right