உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு வாரத்தில் மட்டும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் 3 வாரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில் நேற்று மாத்திரம் உலகளாவிய ரீதியில் கொரோனாவால் 4360 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே கொரோனாவால் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பும், பாதிப்பும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,719,631 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,13,212 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,11,611 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில், 1,507,773 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90,113 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 339,232 பேர் குணமடைந்தும் உள்ளனர்.அமெரிக்காவைத் தொடர்ந்து உலக நாடுகள் அளவில் கொரோனா பாதிப்பில் 2 ஆவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.

இங்கு மொத்தம் 276,505 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 27,5639 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 34,466 ஆகவும் பாதிப்பு 240,161 ஆகவும் இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவில்  272,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,537 பேர் மரணமாகியுள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவால் 31,763  பேர் மரணித்துள்ளதுடன், 224,760பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக, பிரான்ஸில் 27,625 பேர் மரணமாகியுள்ளதுடன், 179, 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பிரேசிலில் 15,633 பேரும் கொரோனாவால்  உயிரிழந்துள்ளதுடன், 233, 142பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.