முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முயற்சி

Published By: J.G.Stephan

17 May, 2020 | 09:27 AM
image

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

கடந்த இரண்டு நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு செல்லும் ஒழுங்கையில் ஆரம்பத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான பாதையில் பொலிஸ் வீதி சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.





முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை கண்காணிப்பது புகைப்படம் எடுப்பது அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பணிப்பது போன்ற வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் முள்ளிவாய்க்கால் கிராமம் ஆரம்பிக்கும் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் .

அத்தோடு வட்டுவாகல் பாலத்துக்கு  முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர்  நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

மே 18 அன்று தமிழின பேரவலத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் கொரோனா  சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில் அரசின் நடவடிக்கைகள் இவ்வாறு அமைந்துள்ளது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07