அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் லிந்துலை வலஹா தோட்டத்து மக்கள்

Published By: Raam

28 Jun, 2016 | 10:51 AM
image

(க.கிஷாந்தன்)

லிந்துலை வலஹா தோட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் 33 வீடுகளை கொண்ட லயன்  பகுதிகளில் வாழும் 150 இற்கு மேற்பட்ட மக்கள் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகமான குடும்பங்கள் வீடு வசதிகள் இல்லாது இம்மக்களால் தற்காலிகமாக அமைக்கபட்ட வீடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வீடுகளில் அடிப்படை வசதிகள் இல்லாதபோதிலும் சிறிய இடத்தில் 05 தொடக்கம் 08 பேர் வரை வசிக்கின்றனர்.இக் குடியிருப்பு பகுதியில் உள்ள சில வீடுகள் வெடிப்புற்ற நிலையில் காணப்படுகின்றது.குடி நீர் வசதிகள் இருக்கின்றபோதிலும் முறையகாக நீர் குழாய்கள் பொருத்தபடவில்லை. அத்தோடு மலசல கூட வசதிகளும் இல்லை.

வடிக்காண்கள் செப்பணியிடப்படாமல் உடைந்த நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இத்தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால் இம்மக்கள் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாதை சீர்கேட்டின் காரணமாக வாகனங்கள் செல்லமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவர்கள் வைத்தியசாலை செல்வதாகயிருந்தால் சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லிந்துலை ஆதார வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்.

இதன்போது இவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலமை உள்ளதாக இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தில் இரண்டு சிறுவர் நிலையங்கள் உள்ளது. இக்குடியிருப்புகள் அதிகமான தூரங்களில் காணப்படுவதால் சிறுவர்களின் நலன் கருதி இரண்டு சிறுவர் நிலையங்கள் இயங்கிவந்த போதிலும் கடந்த வாரம் தோட்ட அதிகாரியால் இப்பகுதியில் உள்ள சிறுவர் நிலையத்தினை மூடியதாகவும், இதனால் தங்களின் குழந்தைகளை சுமார் ஓரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் காலைவேளையில் இதனால் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் வாதிகளால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்கள் ஒரு பகுதிக்கு மாத்திரம் மேற்கொள்ளப்படுவதாகவும் தாங்கள் வாழும் பிரதேசத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் மலையக அரசியல் தலைவர்கள் பாரபட்சம் காட்டுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11