கொரோனா மருந்துக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவை பயனுள்ளவையா என்பதை அறிய சில காலம் எடுக்குமென என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரகால திட்டத்தின் தொழில்நுட்ப தலைவரான மரியா வன் கெர்கோவ் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

கொரோனா மருந்து குறித்து நூற்றுக்கணக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும், இந்த மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன, இறப்பை எவ்வாறு தடுக்கிறது, எவ்வளவு பாதுகாப்பானவை, ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பன உள்ளிட்ட ஆய்வுகளின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.

தற்போது “ஒற்றுமை சோதனை” ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இது சில மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை மையமாக கொண்ட மருத்துவ பரிசோதனையாகும்.

இவை கொரோனாவுக்கு பாதுப்பானவையா மற்றும் பயனுள்ளவையா என்பதை நோக்குகின்றன.

இதற்காக 2,500 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்த சிகிச்சைகள் சிறப்பாக செயல்படுகின்றது என்பதற்கான முழு பதில்களைப் பெறுவதற்கு சில காலம் எடுக்கும். ஆனால் இப்போது கொரோனாவுக்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் எம்மிடம் தற்போது இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.