முன்னறிவித்தல் எதுவுமின்றி அட்டன் தபால் நிலையம் இன்று (16.05.2020) மூடப்பட்டதால் முதியோர் கொடுப்பனவை பெற வந்தவர்கள், நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

கொரோனா பிரச்சினைக்கு முன்பு வழமையாக சனிக்கிழமையன்று நண்பகல் வரை தபாலகம் திறந்திருக்கும். எனினும், தற்போது எவ்வித முன்னறிவித்தலும் இன்றி மூடப்பட்டதாக கொடுப்பனவை பெறவந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

அட்டன் தபால்  நிலையத்தில் நேற்று (15.05.2020)  முதியோர் கொடுப்பனவு வழங்கப்பட்டது. பெருந்திரளானோர் வருகைதந்திருந்ததால் பாதி பேர் திருப்பி அனுப்பட்டிருந்தனர்.

இன்று வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தாலும், மூடப்படும் தகவல் எமக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

செனன், பன்மூர், குடாஓயா, லெதண்டி உட்பட பல பகுதிகளில் இருந்தும் முதியோர் கால் கடுக்க நடந்து வந்தும், கொடுப்பனவு இன்றி திரும்பியமை வேதனைக்குரிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.