இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை பாராட்டியுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சரின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்கும் எனவும் உறுதியளித்தார்.


இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட செய்தியை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை நாட்டின் மீதும் இலங்கை மக்களினதும் நலன்களிலும் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என்ற உறுதியையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கான இந்திய தூதுவராக நேற்று முன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட கோபால் பாக்லே, இலங்கையின் அரசியல் தலைமைகளுடன் சம்பிதாயபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.