AIA ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன்; கூடிய, மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதை ஊக்குவிப்பதற்காக தனது சர்வதேச வர்த்தக நாமத் தூதுவரான டேவிட் பெக்காம் மற்றும் பங்காளரான டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணி ஆகிய இருதரப்பினரையும் அழைத்து வருகின்றது!

புதிய காணொளித் தொடரானது மக்கள் தங்களது ஆரோக்கியத்தையும், உடல், உள நலத்தையும் மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய  எளிய நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது.

சுயாதீனமானப் பொதுப் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய பான்-ஏசியா ஆயுள் காப்புறுதிக் குழுமமான AIA தனது சர்வதேச வர்த்தக நாமத் தூதுவரான டேவிட் பெக்காம் மற்றும் பங்காளரான டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் கால்பந்துக் கழகத்துடனான (“ஸ்பர்ஸ்” அல்லது “தெ கிளப்”) தனது கூட்டாண்மைக்கான புதிய கருத்தாக்கக்; காணொளித் தொடரினை (கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்னரே படப்பிடிப்பு நடாத்தப்பட்டிருந்தது) இன்று துவங்கியிருக்கின்றது.

AIA தனது இரு சர்வதேசப் பங்காளர்களையும் முதன் முறையாக ஒருமித்து அழைத்து வந்திருப்பதையே இக்காணொளித் தொடர் சிறப்பாக அடையாளப்படுத்துகின்றது. இவ்வாரம் வெளியிடப்பட்ட விளம்பரப் (டீஸர்) படம் ஸ்;பர்ஸின் உலகப் புகழ்பெற்ற  அரங்கத்தில் இவ்விரு தரப்பினரையும் காண்பிக்கின்றது.

ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் கூடிய, மிகச்சிறந்த வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கு உதவக்கூடிய AIA இன்  நோக்கத்தை வழிநடத்தக் கூடிய வர்த்தகநாம வாக்குறுதியினால் இந்த முயற்சிக்கு அடித்தளமிடப்பட்டிருக்கின்றது. 

இதன்போது டேவிட் பெக்காம் ஸ்பர்ஸ் பயிற்சி மைதானம் மற்றும் அரங்கத்திற்கு விஜயம் செய்து அங்கிருந்த தலைமைப்  பயிற்சியாளர் ஜோஸ் முரின்ஹோ, முதலாம் அணி வீரர்கள், ஏனைய பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆகியோரைச் சந்திப்பதனையும் இது காண்பிக்கின்றது. டேவிட் பெக்காம் மற்றும் ஸ்பர்ஸ் அணியின் அங்கத்தவர்கள்,  ஒவ்வொருவரும், அவர் தொழில் ரீதியான வீரராக இருந்தாலும் அல்லது சாதாரணமானொருவராக இருப்பினும், அவரது ஆரோக்கியத்தை  மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள முடியுமாகவுள்ள மிகவும் எளிய ஆரோக்கிய மற்றும் வாழ்க்கை முறைத் தெரிவுகளைப் பற்றிக் கலந்துரையாடுகின்றார்கள்.

AIA குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி ஸ்டுவாட் ஏ ஸ்பென்ஷர் கருத்துத் தெரிவிக்கையில், “அதிகளவான மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறைசார் வழிகளைத் தேடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் மிகவும் பிரதானமான டேவிட் பெக்காம் மற்றும் ஸ்பர்ஸ்; அணி ஆகிய எங்களது இரு நீண்ட காலப் பங்காளர்ளுடன் இணைந்து இத்தொடரைத் துவங்குவதில் நாங்கள் மிகவும் ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றோம். ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுவதும் நீண்ட ஆயுளுடன் கூடிய, ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையைச் சாத்தியமாக்கும் நடவடிக்கையினை உருவாக்குவதில் AIA தன்னை மிகவும் அர்ப்பணித்திருக்கின்றது. மிகச்சரியான மக்களை கவர்வதற்கும் அவர்களிடத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கும் டேவிட் பெக்காம் மற்றும் ஸ்பர்ஸ்; அணியின் திறனே இச்செயற்பாட்டு நடவடிக்கையின் நிலைபேறான வெற்றிக்கான முக்கியமான விடயமாகக் கருதப்படுகின்றது. இக்காணொளித் தொடரானது எங்களுடைய ஆரோக்கியத்தையும், உடல், உள நலத்தையும் மேம்படுத்துவதற்கு எங்களால் மேற்கொள்ளக்கூடிய, அது எவ்வளவு சிறியதொரு நடவடிக்கையாக இருந்தாலும், அதனது முக்கியத்துவத்தைப் பற்றியே பேசுகின்றது. போதுமான நித்திரை செய்தல், குடும்பத்துடனும்,நண்பர்களுடனும் நேரத்தைச் செலவு செய்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் அல்லது போதுமான உடற்பயிற்சியினை மேற்கொள்ளல் என எதுவாகவும் அது இருக்கலாம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். 

காணொளி அங்கங்களானது போதுமான நித்திரையை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தினையே நோக்காகக் கொண்டுள்ளதுடன், நித்திரை செய்வதன் உடல் மற்றும் உள ரீதியான அனுகூலங்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் AIA இனுடைய வெற்றிகரமான #OneMoreHour திட்டத்தினையும் கட்டியெழுப்புகின்றது. ஒரு காணொளி அங்கத்தில் டேவிட் பெக்காம், தென் கொரியாவின் சன் ஹெங் மின் மற்றும் பிரேசிலின் லூகாஸ் மோரா ஆகியோரைச் சந்திக்கின்றார். உண்மையில் இவர்கள் இருவரும் தங்களது பயிற்சியின் போதும் மைதானத்தில் விளையாடும் போதும் தங்களது செயற்திறனை அதிகரிப்பதற்கான பாரிய காரணிகளில் ஒன்றாகவிருக்கும் உறுதியான மற்றும் போதுமான தூக்க முறைகளைப் பின்பற்றுகின்றனர். 

அவர்கள் ஸ்பர்ஸின் உள்ளக நிபுணர்களுடன் இணைந்து சிறந்த நடைமுறை ஒழுங்குகளை உருவாக்குதல், போதுமான தரமான நித்திரையை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு எவ்வாறு கழகம் அவர்களுக்கு உதவுகின்றது என்பது பற்றியும் கலந்துரையாடுகின்றனர். மேலும் தங்களது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தக்கூடிய உதவிக் குறிப்புகளையும் வழங்குகின்றனர். உடல் மற்றும் உள ரீதியான இரு ஆரோக்கியத்தினையும் அதிகரிப்பதற்கு இவ்வனைத்து ஒவ்வொரு நடவடிக்கையும் ஒருமித்து எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை ஸ்பர்;ஸ் அணி வலியுறுத்துகின்றது. நாம் அனைவரும் எமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்ற அதே நேரத்தில் மிகவும் திடகாத்திரமாகவும், உறுதியாகவும் இருப்பதற்கு எங்களுடைய நிர்ப்பீடணத்தினையும் அதிகரிப்பதற்கான எங்களால் முடிந்த  விடயங்களை மேற்கொள்ள முடியுமாக இருப்பதும் இங்கு மிகவும் முக்கியமானதாகும்.

AIA இன் சர்வதேச வர்த்தக நாமத் தூதுவர் டேவிட் பெக்காம் கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் அணி மிகச்சிறந்த அணியாகச் செயற்படுவதற்காக  இண்டர் மியாமி CF கழகத்தின் புதிய உரிமையாளர் என்ற வகையில் நான் அவர்களுக்கு உதவ விரும்புகின்றேன். வீரரின் ஆரோக்கியத்திலும்  மற்றும் உடல், உள நலனிலும் முன்னோடியான அணுகுமுறையினைப் பின்பற்றும் ஸ்பர்ஸ் அணியினைப் பற்றிக் கற்றுக் கொள்வதற்கும், ஜோஸைப் போன்ற மிகவும் அனுபவம் வாய்ந்த வெற்றிகரமான பயிற்சி முகாமையாளரிடமிருந்து அறிவுபூர்வமான விடயங்களைப் பெற்றுக்கொள்ள  நேர்ந்ததும் எனது உண்மையான பாக்கியமாகவே கருதுகின்றேன். இதற்காக நான் AIA இற்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றேன். நான் ஒரு விளையாட்டு வீரனாக இருந்த காரணத்தினால், விளையாட்டில் ஏராளமான விஞ்ஞானபூர்வமான விடயங்களும் மற்றும் புதிய சிந்தனைகளும் காணப்படுவதை உண்மையில் நான் நன்கு அறிவேன். எனினும் உறுதியான கிரமமான நடைமுறைகள் மற்றும் சிறந்த நித்திரை போன்ற சிறிய  விடயங்களும் மிகவும் முக்கியமானவையாகும் என இதன்போது தெளிவாகின்றது. மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு முதலாம் நபராக உதவி செய்யும் AIA நிறுவனத்தினுடைய அர்ப்பணிப்பைப் பார்க்கும் போது நான் அவர்களுடன் கூட்டாளராக இருப்பதை நினைத்து மிகவும் பெருமையடைகின்றேன்;” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். 

ஸ்பர்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஜோஸ் முரின்ஹோ கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்வின் தொடக்கத்திலேயே  டேவிட் பெக்கம் போன்ற உண்மையான தலைசிறந்த ஒரு கால்;பந்து வீரரைக் கழகத்திற்கு வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.  டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் கால்பந்துக் கழகத்துடனான அவருடைய உறவைப் பற்றி அவரது குடும்பத்தின் மூலமாகவும் மற்றும் 2011 இல் கழகத்தில் இடம்பெற்ற பயிற்சியின் போதும் எனக்கு அறியக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக அமைந்திருந்தது. அணியினைத் தயார் செய்யும் போதான நல்லொழுக்கம் மற்றும் வீரர்கள் உடல் மற்றும் உள ரீதியாக உச்ச நிலையில் இருப்பதை உறுதிப்படுததுவது தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கு நாங்கள் இருவரும் அதிகளவான நேரத்தைச் செலவு செய்திருக்கின்றோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஒன்றினை  வழிநடத்துவதானது தற்போதுள்ள தருணத்தில் மிகவும் முக்கியமானதாகும். AIA உடனான எங்களுடைய கூட்டாண்மையினூடாக உடல், உள நலத்தைப் பேணி மேம்படுத்தும் AIA இனுடைய மிகச்சிறந்த பணியினை என்னி நாங்கள் மிகவும் பெருமையடைகின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.  

 மற்றுமொரு காணொளித் தொடர் அங்கத்தில், ஸ்பர்;ஸ் அணியின் வீரர்களான ஹரி விங்ஸ் மற்றும் ஜப்ஹெட் டன்கன்கா ஆகியோர் வாழ்க்கை முறைத் தெரிவுகளை மேற்கொள்ளும் போது நற்பழக்கங்களைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடலில் டேவிட் பெக்காமுடன்  இணைகின்றனர். வாழ்க்கை முறைத் தெரிவுகள் எனும் போது வெறுமனே போதுமான நித்திரை செய்வது மட்டுமின்றி, அவர்களின் தொழில் பயணம் முழுவதும் அவர்களுக்கான மேலதிக பலத்தையும், ஆதரவையும் வழங்கக்கூடிய மிகச்சிறந்த உணவுகளை நன்றாக உண்ணுவதைப் பற்றியுமே  அமைகின்றது. இந்த அனைத்து சிறிய படிமுறைகளின் கூட்டானது எங்களுடைய ஆரோக்கியத்திலும் மற்றும் உடல், உள நலனிலும் உறுதியான வேறுபாடொன்றை ஏற்படுத்துகின்றது. 

ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான மக்களை கால்பந்து போன்ற மிகவும் பிரபலமான விளையாட்டு ஒன்றின் வழியாகச் சென்றடைவதற்கு ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் கூடிய, மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு AIA பின்பற்றும் அதே மாதிரியான விடயங்களை உருவாக்குவதில் டேவிட் பெக்காம் மற்றும் ஸ்பர்ஸ் அணியினர் மிகவும் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். 

AIA, 2013 ஆம் வருடத்திலிருந்தே ஸ்பர்;ஸ் கழகத்துடன் தனது கூட்டாண்மையினைப் பேணுவதுடன், கழகத்தின் உலகளாவிய முதன்மையான பங்காளராகவும் செயற்படுகின்றது. மக்கள் நீண்ட ஆயுளுடனான, ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி செய்யும் வகையில் விளையாட்டு விடயங்களில் செயற்பாட்டு ரீதியிலான பங்கேற்பை மேற்கொள்ளும் மிகவும் முக்கியமான பங்கினை ஊக்குவிப்பதற்காகவே இக்கூட்டாண்மை பயன்படுத்தப்படுகின்றது.  கழகம் மற்றும் AIA தங்களது தனித்துவமான கால்பந்து மேம்பாட்டுத் திட்டச் சேவை வளங்களில் பாரிய வெற்றியைக் கண்டுள்ளதுடன்,  ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள யுஐயு இன் 18 சந்தைகளின் 15 இல் 55இ000 இற்கும் அதிகமான மக்களுக்கு ஒட்டுமொத்த உடல் ரீதியான  திடகாத்திரப் பயிற்சிகளை வழங்கிவருவதுடன், இதில் உள்ளுர் மக்களை ஈடுபடுத்தி அவர்களின் கால்பந்துத் திறனை மேம்படுத்தும் திட்டத்திலும் உதவுகின்றது. 

மேலதிகமான தகவல்களைப் பெற https://www.aia.com/en/about-aia.html பார்வையிடுங்கள்.

AIA தனது வர்த்தக நாமத் தூதுவராக டேவிட் பெக்காமினை 2017 இல் நியமித்திருந்தது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்  ஒருவராகவும், அர்ப்பணிப்புமிக்கக் குடும்பத் தலைவர் என்ற வகையிலும், மக்கள் தங்களது ஆரோக்கியத்திலும், உடல், உள நலத்திலும் மேம்படுத்தலை மேற்கொள்வதற்கு எடுக்கக்கூடிய சாத்தியமான படிமுறைகளை அடைவதற்கு AIA நிறுவனத்திற்கு உதவக்கூடிய வகையில் டேவிட் பெக்காம் முக்கியமான மற்றும் முதன்மையான பங்கினையே வகிக்கின்றார். டேவிட் உடன் AIA #WhatsYourWhy பிரச்சாரத்தினை ஆரம்பித்திருந்ததுடன், இதில் பொது மக்களின் உறுப்பினர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான தங்களது ஊக்கப்படுத்தல் மற்றும் உத்வேகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வினவப்பட்டிருந்தனர். ஆசியாப் பிராந்தியத்தின் மில்லியன் எண்ணிக்கையான மக்கள் இதனைப் பார்த்திருந்ததுடன், இப்பிரச்சார நடவடிக்கையில் பங்குபற்றியுமிருந்தனர். நீண்ட ஆயுளுடன் கூடிய, ஆரோக்கியமான, சிறந்த  வாழ்க்கைக்கு உதவும் முகமாக டேவிட் AIAசந்தைகளுக்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்வதுடன் அங்கு அவர் பெரும் எண்ணிக்கையான AIA வாடிக்கையாளர்கள், முகவர்கள், பங்காளர்கள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்பாடலிலும் ஈடுபடுகின்றார்.

AIA வரையறுக்கப்பட்ட குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் (ஒட்டுமொத்தமாக “AIA” அல்லது “குழுமம்”) சுயாதீனமானப் பொதுப் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய பான்-ஏசியா ஆயுள் காப்புறுதிக் குழுமத்தில் உள்ளடங்குகின்றன. ஆசிய-பசுபிக் வலயத்தில் 18 சந்தைகளையும், முழு உரித்துடைய கிளைகள் மற்றும் துணை நிறுவனங்களை ஹொங்கொங் SAR, மெயின்லேண்ட் சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, கம்போடியா, இந்தோனேசியா, மியன்மார், பிலிபீன்ஸ், தென் கொரியா, தாய்வான் (சீனா), வியட்நாம், புரூணே, மக்குவா SAR,  மற்றும் நியூசிலாந்து, ஆகிய இடங்களிலும், 99% ஆன துணை நிறுவனத்தை இலங்கையிலும், 49% கூட்டு வணிகத்தை இந்தியாவிலும் கொண்டுள்ளது.

AIAஇன் தற்போதைய வர்த்தக நடவடிக்கைகள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1919 ஆம் ஆண்டளவில் ஷங்காய் நகரில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆயுள் காப்புறுதிக் கட்டுப்பணங்களின் அடிப்படையில் (ஜப்பான் தவிர்ந்த) ஆசிய பசுபிக் பிராந்தியச் சந்தையில் முதன்மையான நிறுவனமாகத் திகழ்வதோடு, அதனது சந்தைகளின் பெரும்பாண்மைக்கு ஊடாக முக்கிய பொறுப்புக்களைத் தன்வசப்படுத்தியுமுள்ளது. மேலும் 2019 டிசம்பர் 31ம் திகதியின் பிரகாரம் 284 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த சொத்து மதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் திகழ்கின்றது.

AIA நிறுவனம் ஆயுள் காப்புறுதி, விபத்து, சுகாதாரக் காப்புறுதி மற்றும் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட மேலும் பலதரப்பட்ட காப்புறுதித் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஊடாக தனிநபர்களின் நீண்ட காலச் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றது. அத்துடன் குழுமமானது பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஊழியர் அனுகூலங்கள், ஆயுள் கடன் மற்றும் ஓய்வூதியச் சேவைகள் போன்றவற்றையும் வழங்குகின்றது. ஆசிய-பசுபிக் முழுவதும் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட முகவர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் வலையமைப்பின் ஊடாக 36 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் காப்புறுதிதாரர்களுக்கும், மற்றும்  குழுமத்தின் காப்புறுதித் திட்டங்களில் பங்கேற்கும் 16 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கும் சேவைகளை வழங்குகின்றது. 

AIA வரையறுக்கப்பட்டக் குழுமமானது வரையறுக்கப்பட்ட ஹொங்கொங் பங்குச் சந்தையின் பிரதான சபையில் அமெரிக்கன் டிபொசிடரி ரிசீட்ஸ் (American Depositary Receipts) (மட்டம் 1) உடன் “1299” பங்குக் குறியீட்டின் கீழ் பங்குச் சந்தைக்கு வெளியே (over-the-counter) பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடியதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது (டிக்கர் குறியீடு:“AAGIY”).

டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் பற்றி

1882 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட டோட்டன்ஹம் ஹொட்ஸ்பர் கால்பந்துக் கழகமானது கால்பந்து விளையாட்டின் கவர்ச்சியான தோற்றத்தையும் மற்றும் மகிழ்விக்கக்கூடிய பொழுதுபோக்கான கால்பந்து விளையாட்டின் பாரம்பரியத்துடனும் திகழ்கின்றது. வட லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் இங்லிஸ் பிரிமியர் லீக் கழகமானது தனது வரலாற்றில் 2018ஃ2019 காலப்பகுதியில் முதன்முறையாக UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் இறுதி வரை முன்னேறியிருந்ததுடன், ஏற்கனவே ஐரோப்பாவின் எலைற் போட்டிக்காக தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் தனது தகைமையினைப் பலப்படுத்தியுமிருந்தது. 

2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் கழகமானது 62இ303 இருக்கைகளைக் கொண்ட புதிய அரங்கம் ஒன்றினைத் திறந்திருந்தது. அதாவது இது வட டோட்டன்ஹமின் விளையாட்டை முன்னிலைப்படுத்துகின்ற £1 பில்லியன் பெறுமதியான வெற்றிகரமான மீளுருவாக்கத்தின் மையத்தில் அமைந்திருக்கின்றது. லண்டனிலுள்ள மிகப்பெரிய கால்பந்துக் கழக மைதானமாகவே இவ்வரங்கம் காணப்படுகின்றது. வருடத்தின் 365 நாட்களும் NFL, ரக்பி, இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய பிரதான நிகழ்வுகள் உட்பட பலவிதமான நிகழ்வுகளை நடாத்துவதற்கு இடவசதியினைக் கொண்ட பல் பயன்பாட்டு இடமாகவும் இது திகழ்கின்றது. 

மேலும் அரங்கத்தின் அபிவிருத்தித் திட்டமானது ஒவ்வொரு வருடமும் உள்நாட்டு பொருளாதாரதின் £293  மில்லியன் முதலீட்டில் 3இ500 புதிய தொழில் வாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும். மேலும் வருடமொன்றுக்கு 1இ700 புதிய தொழில் மற்றும் £166 மில்லியன் உள்நாட்டு செலவின அதிகரிப்புக்கும் வழிகோலும்.

 டோட்டன்ஹம் ஹொட்ஸ்பரானது: 

272 மிகவும் ஈடுபாட்டுடைய, அணி திரண்ட மற்றும் உத்தியோகபூர்வமான ஆதரவாளர் கழகங்களை உள்ளடக்குகின்ற உலகளவில் 460 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர் இரசிகர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.

மிகச்சிறந்த திறமையான வீரர்களை இனங்கண்டு, தக்கவைத்து மற்றும் மேம்படுத்தும் கழகத்தினுடைய இலட்சியத்திற்கு உதவுகின்ற £100 மில்லியன் பெறுமதியான முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட பயிற்சி நிலையத்தைக் கொண்டுள்ளது.

உலகின் முதன்மையான ஆயுள் காப்புறுதிச் சேவைகள் வழங்குநர்களில் ஒருவரான AIA குழும லிமிடட்  (AIA) மற்றும் உலகின் முதன்மையான விளையாட்டுக்; காலணி மற்றும் ஆடை நிறுவனமான நைக் (Nike) ஆகிய சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமங்களுடன் வர்த்தக ரீதியான கூட்டாண்மையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி, தொழில் வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சமூக சேர்க்கைத் திட்டங்கள் ஊடாக அதனது உள்ளுர் மக்களுக்கு உதவக்கூடிய வகையில் மூன்று மில்லியன் வாய்ப்புகளை உருவாக்கியுள்ள விருது பெற்றுள்ள அறக்கட்டளை ஒன்றையும் கொண்டுள்ளது.