கொரோனா வைரசுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 என்ற தடுப்பூசியை, முதல் தடவையாக குரங்குகள் மீது சோதனைக்குட்படுத்தப்பட்டது. 

இச்சோதனை  வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.

உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகின்றன.இந்நிலையில், கொரோனா வைரசிற்கு எதிராக ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகமும் தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசிக்கு பெயர் ''ChAdOx1 nCoV-19'' என்பதாகும். இதை விளக்கமாக chimpanzee adenovirus vaccine vector (ChAdOx1) என்று கூறலாம். ChAdOx1 வகை தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானது ஆகும்.

இந்த தடுப்பூசி கொரோனாவில் இருக்கும் கூம்புகளை தாக்கி அழிக்கும். உடலில் உண்மையில் கொரோனா வைரஸ் தாக்கும் போது, இந்த தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் தாக்கி அழிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. 

இதற்கான மனித சோதனை ஏற்கனவே முடிந்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சில வாரங்கள் கழித்து இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மனிதர்கள் மீது தொடர்ந்து இந்த தடுப்பூசியை வைத்து சோதனை செய்ய இருக்கிறார்கள். இதற்கான அடுத்தகட்ட சோதனையை அடுத்த வருடம் செய்ய இருக்கிறார்கள். இந்த சோதனை நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரசிற்கு எதிராக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசியை வைத்து குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளது.

அதன்படி குரங்குகளில் இந்த தடுப்பூசியை செலுத்திய பின் சில குரங்குகளுக்கு 14 நாட்களுக்குள் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. சில குரங்குகளுக்கு 28 நாட்களுக்குள் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசி தொடர்பாக பல்கலைக்கழகம் கூறுகையில்,

கொரோனாவிற்கு எதிராக இது முதல்கட்ட வெற்றி என்கிறார்கள். இது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது.

குரங்குகளிடமும் மனிதர்களிடமும் இது தொடர்பாக அடுத்தகட்ட சோதனைகளை செய்ய வேண்டும். உடனே இந்த மருந்துகளில் சோதனையையை அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள். இதனால் விரைவில் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .