தனமன்வில, பொதகம பகுதியில் வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.

வாகனங்கள் இரண்டும் அதிவேகமாக சென்றதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த வேனில் பெண்கள் இருவர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஐவரும் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.