Published by T. Saranya on 2020-05-16 13:57:39
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் கேகாலை மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
அந்தவகையில் கேகாலை மாவட்டத்தில் வட்டாராம ஹெல பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வல்தெனிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 65 வயது பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கேகாலை - அவிசாவளைசாலை பிராதன வீதியிலிருந்து கொட்டியாகும்புர பகுதி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, மேலும் சிறிய வாகனங்களை மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.