Published by T. Saranya on 2020-05-16 13:41:42
இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் உலக நாடுளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, உயிர்பலியையும் தடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 82 ஆயிரத்து 941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே சமயம், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்பலியும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,752 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இதனையடுத்து கொரோனா பாதிப்பில், வைரசின் பிறப்பிடமான சீனாவை முந்திய இந்தியா, அதிக பாதிப்பு பட்டியலில் 11வது இடத்தை பிடித்தது.
உலகில் இதுவரை 213 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசுக்கு, 46 இலட்சத்துக்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.