அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 88 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 88,507 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்று நோய் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. உலக நாடுகள் அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,621,414 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்  உயிரிழந்தோர்  எண்ணிக்கை  308,154 ஆகும். கொரோனா பாதிக்கப்பட்டு உலக நாடுகளில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,754,556 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

நாடுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,484,285 ஆக உயர்ந்திருக்கிறது. 

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் 88,507ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 326,242 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து உலக நாடுகள் அளவில் கொரோனா பாதிப்பில் 2 ஆவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இங்கு மொத்தம் 274,367 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 27,459 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 33,998 ஆகவும் பாதிப்பு 236,711 ஆகவும் இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் 262,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,418 பேர் மரணமாகியுள்ளனர்.

இத்தாலியில் கொரோனாவால் 31,610 பேர் மரணித்துள்ளதுடன், 223,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, பிரான்ஸில் 27,529 பேர் மரணமாகியுள்ளதுடன், 179, 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பிரேசிலில் 14,817பேரும் கொரோனாவால்  உயிரிழந்துள்ளதுடன், 218,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.