(செ.தேன்மொழி)
ரணில் - ராஜபக்ஷ தரப்பினர் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கச் சக்திக்கு எதிராக எத்தந்தவிதமான வழக்குகளை தொடர்தாலும் அதனை வெற்றிக் கொள்வதாகவும், தங்களது கட்சி தொடர்பில் எந்தவித சட்டசிக்கலும் இல்லை எனவும் கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சக்தி நீதியான முறையிலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணையகமும் வழங்கியுள்ளது. இந்நிலையில் ரணில் விக்கிரம சிங்க, ராஜகஷாக்களுடன் கொண்டுள்ள டீல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் எமது கட்சியின் சட்டசிக்கல் தொடர்பில் வழங்கு தாக்கல் செய்துள்ளார்.எந்தவித வழக்கை தோடர்ந்தும் எம்மை பலவீனப்படுத்த முடியாது.
நாட்டிலுள்ள சிறந்த ஜனாதிபதி சட்டதரணிகள் எம்மோடு இணைந்துள்ளனர். அதனால் எந்த வழக்கையும் நாங்கள் இலகுவில் வெற்றிக்கொள்வோம்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளும் இல்லாத நிலையில் இ எமது கட்சித் தொடர்பில் பிரசாரத்தை மேற்கொள்வதற்கான சந்தரப்பத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
கடந்தகாலங்களில் ரணில் தரப்பினர்களினாலேயே எமக்கு பெரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டனஇ தற்போது அந்த குழுவினர் எம்மை விட்டு விலகிச் சென்றுள்ளதால், எமக்கு சுயாதீனமாக செயற்பட முடியும். ராஜபக்ஷாக்களுக்கு சவால் ஏற்படுத்தும் ஆளுமை எம்மிடம் உள்ளது.
அதனால் யாருடைய எதிர்ப்புகளையும் கண்டு அச்சம் கொள்ள மாட்டோம். பொதுத் தேர்தலை நடத்துதல் தொடர்பில் எமக்கு எந்தவித ஆடசேபனையும் இல்லை. நாளை தேர்தலை நடத்துவதென்றாழும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். னோல் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில் நாடு இல்லை. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையில் மக்கள் தற்போது ஒருவேளை உணவை பெற்றுக் கொள்வதிலும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசாங்கம் அரசியலமைப்பை மீறி செயற்படுவதை கண்டும் நாங்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல்இருப்பதற்கான காணம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தடுப்பதற்காக அரசாங்கம் எவ்வாறான முயற்சிகளை எடுத்தாலும், அதற்கு இடையூறு விளைவிக்க கூடாது என்பதற்காகவே. அரசியலமைப்பை மீறி நிதி ஒதுக்கீடு, கடன் பெறுதல் மற்றும் நாணய அச்சிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாங்கள் அமைதிகாத்து வருகின்றோம்.
இந்த செயற்பாடுகளுடாக எதிர்வரும் சந்திதினர் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி நிதி உதுக்கீடுகளை முறையாக செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தபோதிலும் அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தாத போதிலும்இ மக்களும் அதற்கு இணக்கப்பாட்டை காட்டாத நிலையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எமக்கும் விருப்பமில்லை.
இறக்குமதியாளர்கள் பலர் நட்டத்தில் இருக்கின்றனர். கொரோனா நெருக்கடியால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டநாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் முறையான முகாமைத்தும் இல்லாவிட்டால் ஏனைய ஆசிய நாடுகளையும் விட பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
இந்நிலையில் அரச ஊழியர்களின் ஊதியத்தை நிறுத்த முயற்சிப்பது நியாயமற்ற செயற்பாடாகும். எதிர்வரும் மாதங்கபளில் நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்கள் மற்றும் அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பெரும் தொகையான செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறாக நிலையில் ஊதியத்தை நிறுத்தினால், இவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்பும் இருக்கு. இந்நிலையில் கொரோனா தொற்றை விட மாரடைப்பினால் உயிரிழப்பவர்களின் தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இந்நிலையில் மக்களுக்கு என்ன அனர்த்தம் ஏற்பட்டாலும் இ கொரோனாவின் நிழலில் தேர்தலை வெற்றிக் கொள்ள முயற்சிக்கும் அரச தரப்பினர்இ மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்துவதை விடுத்து தேர்தல் தொடர்பிலே அக்கறை செலுத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM