41ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணம் தங்கப் பதக்­கத்தை வென்­றுள்­ளது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சும் விளை­யாட்­டுத்­துறை திணைக்­க­ளமும் நடத்­திய இப் போட்­டிகள் கொழும்பு ரோயல் கல்­லூரி கூடைப்­பந்­தாட்ட அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்­றன.

ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதி ஆட்­டத்தில் மத்­திய மாகா­ணத்தை எதிர்த்­தா­டிய கிழக்கு மாகாணம் கடும் சவா­லுக்கு மத்­தியில் 71 க்கு 70 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது.

தங்கப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாண அணியில் எஸ். விஜி­தரன் (தலைவர்), எஸ். விதுர்ஷன், எம். என். ஹசன், எல். ருக் ஷான், கே. சி. ஆஷான், எஸ். டினூர்ஷன், ஐ. ஏ. வெனிட்டோ, ரீ. நிதுஷன், வி. விஜய், வி. விவேக், எம். கே. ஷிரான் ஆகியோர் இடம்­பெற்­றனர்.

மேல் மாகாணம் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.