சீரற்ற காலநிலை : மண்சரிவு , வெள்ள அபாய எச்சரிக்கை !

15 May, 2020 | 07:52 PM
image

நாட்டில் தற்போது நிலவும்  மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்படக்கூடும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தவகையில், மீ ஓயா, தெதுரு ஓயா, களனி கங்கை, களு கங்கை, நில்வள கங்கை, ஜின் கங்கை ஆகியவற்றுக்கு அருகில் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, மாத்தளை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல்ல பிரதேசத்திலும் காலி மாவட்டத்தின் பத்தேகம, அக்மீமன, எல்பிட்டிய, நியகம உள்ளிட்ட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.

அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

நெடுங்கேணியில் இணைந்து போட்டியிடுவோம் ; ஜனநாயக...

2025-02-10 17:40:02
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 17:30:36
news-image

பதில் அமைச்சர்களாக நால்வர் நியமனம்

2025-02-10 17:45:06