புத்தளம் நவகத்தேகம் குருகெட்டியாவ பகுதியில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்த பிரதேச மக்கள் நவகத்தேகம் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் சென்று பார்வையிட்டதுடன் மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். 

உயிரிழந்த யானையை பார்வையிட்ட நிக்கவெரட்டிய மிருக வைத்தியர் குறித்த யானை 4 நாட்களுக்கு முன்னர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் யானை 25 வயதுடையதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.