மே மாதத்தில் பண­வீக்­க­மா­னது 5.3 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.

அதன் படி, ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில்2016 ஏப்ரல் மாதத்தில் பண­வீக்­க­மா­னது 4.3 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 மே மாதத்தில் 5.3 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­துள்­ளது.

இவ் அதி­க­ரிப்­பிற்கு உணவு, வீட­மைப்பு, நீர், மின்­வலு, வாயு மற்றும் ஏனைய எரி­பொருள் துணைத்­துறை தவிர்ந்த உண­வல்லா அனைத்து வகை­க­ளும்­ பி­ர­தான பங்­க­ளிப்பை வழங்­கின.

அத்­துடன் ஆண்டு சரா­சரி அடிப்­ப­டையில் அள­வி­டப்­பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணின் மாற்றம் ஏப்ரல் மாதத்தில் 2.6 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 மே மாதத்தில் 2.7 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­தது.

அதே போல் ­தே­சிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணில் ஏற்­பட்ட மாற்­ற­மா­னது 1.9 சத­வீ­தத்­தினால் அதி­க­ரித்­தது.

இம்­மா­தாந்த அதி­க­ரிப்­பிற்கு, உண­வல்லா வகை­யி­லுள்ள விட­யங்­களின் விலை­களில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பே முக்­கிய கார­ண­மாக அமைந்­தது. ஆடைகள் மற்­றும் ­கா­ல­ணிகள், வீட­மைப்பு, நீர், மின்­வலு, வாயு, எரி­பொ­ருட்கள் தள­பா­டங்கள், வீட்டுச் சாத­னங்­கள்,வழ­மை­யான வீட்டு பேணல்கள் நலம் தொடர்­பூட்டல் பொழு­து­போக்கு கலாச்­சா­ரம்­, உ­ண­வ­கங்கள் சுற்­றுலா விடு­திகள்,பல்­வகைப் பொருட்கள் மற்றும் பணி­களின் துணை வகை­களின் விலைகள் இக் காலப்­பகுதியில் அதி­க­ரித்­தன.

அண்­மை­யில் ­வ­ரி­க­ளில் செய்­யப்­பட்ட மாற்­றங்­க­ளின்­நே­ர­டித்­தாக்­கமும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணின் மாதாந்த அதி­க­ரிப்பில் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

மே மாதத்தில் உணவு மற்றும் வெறி­ய­மல்லா குடி­பான வகை­களின் விலை­களும் அதி­க­ரித்­த­தோடு இக்­கா­லப்­ப­கு­தியில் காய்­க­றிகள், அரிசி, எலு­மிச்­சம்­பழம், உரு­ளைக்­கி­ழங்கு, பருப்பு, சின்ன வெங்­காயம், பச்சை மிளகாய், சீனி மற்றும் கரு­வாடு என்­ப­ன­வற்றின் விலைகள் அதி­க­ரித்­தன.

அதே­வேளை, இம் மாதக் காலப்­ப­கு­தியில் வெறி­யம்சார் குடி­வ­கைகள் மற்றும் புகை­யிலை துணை வகையின் விலைகள் வீழ்ச்­சி­ய­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இருப்­பினும், போக்­கு­வ­ரத்து மற்றும் கல்வி துணை வகைகள் இம்­மாத காலப்­ப­கு­தியில் மாற்­ற­மின்­றிக்­கா­ணப்­பட்­டன. அதே­வேளை, ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில் பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­படைப் பண­வீக்­கத்­தினைப் பிர­தி­ப­லிக்­கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பண­வீக்கம் 2016 ஏப்ரல் மாதத்தில் 5.9 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 மே மாதத்தில் 7.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச்சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதத்திலிருந்து 2016 மே மாதத்தில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.