(நா.தனுஜா)

வியட்நாம், தென்கொரியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளால் பின்பற்றப்படும் நடைமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு உட்படுவதைத் தவிர்க்க முடியும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதன் ஓரங்கமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதும்இ முடக்கப்பட்டிருந்த நாட்டை மீண்டும் பகுதியாகத்  திறப்பதுவும் தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான விடயங்களாகும்.

அதேவேளை இந்தத் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்திற்கு உட்படுவதைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமாகும். இவ்விடயத்தில் வியட்நாம்இ தென்கொரியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளால் பின்பற்றப்படும் நடைமுறைகளை அமுல்படுத்தலாம்.

அதேபோன்று புத்தாக்க முயற்சிகள் மற்றும் புதிய வரத்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உதவ  பல்வேறு தனியார் நிறுவனங்கள்இ வங்கிகள் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.