பணம் இல்லையெனக் கூறும் அரசாங்கத்தால் வீதி நிர்மாணத்திற்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டது - ஜே.வி.பி

Published By: Digital Desk 3

15 May, 2020 | 07:22 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப இம் மாதம் 14 ஆம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றிருக்க வேண்டும்.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை காரணமாக குறித்த திகதியில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவில்லை.

எனவே இது குறித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அத்தோடு மே மாதம் 14 ஆம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த அறிவித்தலுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறவில்லை.

அது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படவுமில்லை. இவற்றின் மூலம் நாடு ஒழுங்கற்ற நிலையில் சென்று கொண்டிருப்பது தெளிவாகின்றது. இது குறித்து அரசாங்கம் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

எரிபொருள் விலை

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை பெருமளவில் குறைவடைந்துள்ளது. ஆனால் அதன் பயன் இது வரையில் நாட்டு மக்களை சென்றடையவில்லை.

கடந்த அரசாங்கத்தில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு சைக்கிளில் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து எதிர்ப்பு தெரிவித்த தற்போதைய பிரதமர் உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

ஆனால் அமைச்சர் பந்துல குணவர்தன ஒரு வருட காலத்திற்கு எரிபொருள் விலை குறைக்கப்படமாட்டாது என்று கூறுகின்றார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவதாகக் கூறினார்.

இதன் மூலம் முக்கியமான விடயங்கள் ஏதேனும் தெரிவிக்கப்படும் என்று நாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது டின் மீன் மற்றும் பருப்பின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்தார். அத்தோடு எரிபொருள் விலை குறைப்பின் பயனை இதன் மூலம் மக்களுக்கு வழங்குவதாகவே தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சில வாரங்களில் டின் மீன் மற்றும் பருப்பிற்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதன் மூலமாகவும் மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய எரிபொருள் நிவாரணமும் வழங்கப்படவில்லை.

வைரஸ் பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு 2572 கோடி ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக பெருமையாகக் கூறிக் கொண்டிருக்கும் அரசாங்கம் எரிபொருள் விலை குறைவு மூலம் இலங்கைக்கு எத்தனை கோடி இலாபம் கிடைத்துள்ளது என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 3100 கோடி ரூபா புதிதாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதை விடவும் கூடுதலான நிதி வீதி நிர்மாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பணம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தால் எவ்வாறு புதிதாக இந்த நிதியை ஒதுக்க முடிந்தது?

அரசாங்கத்தின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளினால் நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா கடன் செலுத்த வேண்டியவர்களாகவும் , அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடனுக்காக 80 ஆயிரம் ரூபா வரி செலுத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர்.

எனவே அரசாங்கம் தனது கடன் சுமையை மக்கள் மீது சுமத்துவதை நிறுத்த வேண்டும். அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதன் பயன் நாட்டு மக்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும். அதற்கமைய எரிபொருட்களின் விலை துரிதமாகக் கிடைக்கப் பெற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51