ஜோதிகா நடிப்பில் தயாராகியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' மே 29ஆம் திகதியன்று டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் ஜே ஜே பிரெடரிக் இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இப்பாடத்தில் ஜோதிகாவுடன் தமிழ் திரையுலக மூத்த இயக்குனர்களான கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப்போத்தன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படம்  வெளியாகவில்லை. தற்பொழுது அமேசான் எனும் டிஜிற்றல் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 

அந்த வகையில் இப்படம் மே 29ம் திகதியன்று டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஒரு திரைப்படம் நேரடியாக டிஜிற்றல் தளத்தில் வெளியாவது இதுதான் முதன்முறை என்றும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சிறிய பட்ஜட்டில் தயாராகி இருக்கும் திரைப்படங்கள் இனி டிஜிற்றல் தளத்தில் நேரடியாக வெளியாகக் கூடும் என்றும் திரையுலகினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.