இலங்கை விமானப் படையினரால் கண்காணிக்கப்பட்டு வரும் வன்னி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இன்றைய தினம் 180 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நிறைவுசெய்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவானது 14 நாட்க்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களிடம் பி.சி.ஆர். சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் நீர்கொழும்பு, குருணாகல், அனுராதபுரம் மற்றும் பொல்ஹாவெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.