தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு வெளிநாட்டு அஞ்சல் மற்றும் பொருட்களை விமானம் மற்றும் கடல் வழியாக அனுப்ப தபால் திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

விமான நிலையங்களில் அன்றாட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததனால், வெளிநாட்டு அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் செயலிழந்திருந்தது.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இலங்கை எயார்லைன்ஸால் இயக்க திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு இணையாக பல நகரங்களுக்கு வெளிநாட்டு அஞ்சல் மற்றும் பொருட்களை விமானம் மற்றும் கடல் வழியாக அனுப்புவதை மீண்டும் ஆரம்பிக்க தபால் துறை முடிவு செய்துள்ளது.

எவ்வாறெனினும்  கடல்வழியாக அஞ்சல் விநியோகத்தை நிறைவுசெய்ய இரண்டு மாத காலம் தேவை என்றும் தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.