(எம்.எப்.எம்.பஸீர்)
நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்து சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இன்று விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு விசாரணைகளுக்காக மங்கள சமரவீர அழைக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் வர முடியாது என அவர் சி.ஐ.டி.க்கு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராக மங்கள சமரவீரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி குறித்த நேரத்தில் கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் ஆஜராகிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரிக்கப்பட்டது.
அந்த விசாரணைகள் இரவு 7.15 வரை நீடித்திருந்தது. இந்நிலையிலேயே விஷேட வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் மங்கள சமரவீர விடுவிக்கப்பட்டார்.

தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற இந்த வாக்காளர் விவகாரத்தை மையப்படுத்திய முறைப்பாட்டுக்கு அமைய சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இது குறித்து கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி , சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டிருந்த போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த இடம்பெயர்ந்த 12 வாக்காளர்களையும், வட மாகாணத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க அனுப்பி வைக்க 225 பஸ் வண்டிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டதையும், நீன்ட நாள் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் அமைச்சின் தலையீட்டுடன் அந்த விடயம் இடம்பெற்றுள்ளமையும் குறித்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அவ்வாறு வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்துகொடுக்க நிதி அமைச்சிடம் இருந்து எழுத்து மூல அனுமதி பெறப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் ரிஷாட் சார்பில் சி.ஐ..டி. விசாரணைகளின் போது கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையிலேயே, அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமர வீரவிடம் விசாரணைகள் இன்று நடாத்தப்பட்டன.
இதனிடையே இந்த விவகாரத்தில் தன்னை சி.ஐ.டி. சாட்சிகள் இன்றி கைது செய்ய முயல்வதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM