(எம்.எப்.எம்.பஸீர்)
2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், அது சார்ந்த இடையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதை பரிசீலிக்க ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் நியமிக்கப்பட்டுளது.
பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இந்த நீதியரசர்கள் குழாமை இன்று பெயரிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்களன்றும் செவ்வாயன்றும் குறித்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், நீதியர்சர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் குறித்த நீதியர்சர்கள் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இம்மனுக்களில், ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM