மன்னார் சிலாபத்துறை பகுதியில் மன்னார் மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் சிலாபத்துறை கடற்படையினரும் இணைந்து அவ்பகுதி காடுகளை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது ஒரு கோடியே 20 இலச்சம் ரூபா பெறுமதியான கேரளாக் கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டன.

இவ்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
மன்னார் சிலாவத்துறை பகுதியில் இந்தியாவிலிருந்து கஞ்சா வந்து இறக்கப்பட்டிருப்பதாக சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் மாவட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவலை வழங்கியதைத் தொடர்ந்து (09) மன்னார் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி தர்மலிங்கம் நந்தகுமார் தலைமையில் சென்ற வி.சேனாதிராஐh, nஐ.குலசிங்கம்,ப.றொபின்சன், அ.யேசுராஐன் பீரீஸ் ஆகியோhர் கொண்ட மதுவரித் திணைக்கள குழு அப்பகுதி கடற்படை கமாண்டர் காமினி யாசிங்க தலைமையில் கொண்ட கடற்படையினரும் இணைந்து திங்கள் கிழமை இரவு 9மணி தொடக்கம் செவ்வாய் கிழமை (10) நன்பகல் வரை அப்பகுதி காடுகளை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தியபோது 134 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.


இவ்காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தப்பட்ட சமயத்தில் சந்தேக நபர்கள் தப்பியோடியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


கைப்பற்றப்பட்ட இவ் கஞ்சா பொதிகளை இன்று மன்னார் நீதிமன்றில் முன்னிலைப் படத்துவதற்கான நடவடிக்கையை மதுவரித் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.