இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கொரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பான சேவைகளை வழங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார் வாகன காப்புறுதிகளை புதுப்பிப்பதற்கு முடியாதிருக்கும் பட்சத்தில் காப்புறுதிப் பத்திரதாரர்கள் காப்புறுதிக் கூட்டுத்தாபன அலுவலகத்துடன் தொடர்பு கொண்டால் இரண்டு வாரங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் தற்காலிகமாக நீடிக்கப்பட்ட காப்பீடொன்று அவர்களுக்கு வழங்கப்படும்.

நாளாந்த சிகிச்சைப் பண அனுகூலம், சிகிச்சைக் கட்டணச் சிட்டை தீர்வுகள் (காசற்ற, செலவை செய்யும் விருப்பத் தேர்வுகள்) கடும் சுகவீன காப்பீடு, கொரோனா  சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பான உயிரிழப்புக்கள் ஆகியவற்றையும் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் அதன் சுகாதார மற்றும் ஆயுள் காப்புறுதி காப்பீடுகளின் கீழேயே கொண்டு வந்துள்ளது.

மேலும் அனைத்து காப்புறுதிக் கூட்டுத்தாபன கூட்டாண்மை சுகாதார காப்புறுதி பத்திரதாரர்களின் கொரோனா  தொற்று காரணமாக ஏற்படும் சிகிச்சை செலவுகளும் கூட்டுத்தாபனத்தினாலேயே வழங்கப்படும்.

இதே போன்று காப்புறுதிதாரர்கள் தங்கள் காப்புறுதிகளை புதுப்பிப்பதற்கும் சந்தா கொடுப்பனவை மேற்கொள்வதற்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

Online payment

gateway – www.srilankainsurance.net, SLIC mobile App ஆகினவும்  சம்பத் வங்கி (092960000104), கொமேர்ஷல் வங்கி (1484444444), மக்கள் வங்கி (014100120112337)இ இலங்கை வங்கி (0000164657), ஹட்டன் தேசிய வங்கி (003010313831, தேசிய சேமிப்பு வங்கி (100011141139) நேசன்ஸ் ட்ரஸ்ட் (011106000275). Apple

Store, Google playstore, Mobile Payment Facilities - Genie/FriMi/mCash/eZycash, ஆகியன ஊடாக நேரடி வங்கி கொடுப்பனவு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

அரசாங்கம் தற்போது கொரோனா தொற்றை தடுப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதோடு பல வைத்தியசாலைகளில் இலவசமாக அதிசிறந்த கவனிப்பையும் வழங்கி வருகிறது. 

மேலும் அரசாங்கத்தினதும் உலக சுகாதார நிறுவனத்தினதும் கொரோனா பாதுகாப்பு அறிவுறுத்தல்களின்படி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஒரு சமூக பொறுப்புக்களை கொண்டுள்ள அரசாங்க நிறுவனம் என்ற வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்துகிறது.

தொற்று நோய்களுக்கான தேசிய தடுப்பு நிலையம், இலங்கை தேசிய வைத்தியசாலை சிறுவர்களுக்கான லேடி றிட்ஜ்வே வைத்தியசாலை, பெண்களுக்கான காசில் ஸ்றீற் வைத்தியசாலை  முல்லேரியா ஆதார வைத்தியசாலை, வட கொழும்பு போதனா வைத்தியசாலை, நீர்கொழும்பு மாவட்ட அரசினர் வைத்தியசாலை, கம்பஹா மாவட்ட அரசினர் வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, அம்பாந்தோட்டை மாவட்ட அரசினர் வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, அனுராபுரம் போதனா வைத்தியசாலை, குருநாகல் மாகாண அரசினர் வைத்திசாலை, பதுளை மாகாண அரசினர் வைத்தியசாலை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை ஆகியன உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் கொரோனா நோய்க்கான சோதினைக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவுவதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல் அறிவுறுத்தல்ளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் பொது மக்களிடம் கேட்டுள்ளது.

காப்புறுதி பற்றிய விசாரணைகளுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் துரித எண் 011 2357 357 இல் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, சேமநலன் ஆகியவற்றில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அதீத அக்கறை கொண்டுள்ளது.