நைஜீரியாவின் சுயாதீன ஊழல் நடைமுறைகள் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான ஆணையகம் (ஐ.சி.பி.சி) இரண்டு இலங்கையர்களை கைதுசெய்வதற்கான நீதிமன்ற பிடியாணை உத்தரவினை பெற்றுள்ளது.

மலேசியா குடியரசின் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திர மோசடி உள்ளிட்டவற்றிற்காக சத்தியராஜ் கந்தராசா மற்றும் வினித் உகாந்தராசா ஆகிய இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நீதிமன்ற விசாரணைக்காக அவர்கள் இருவரும் நைஜீரியாவின், அபுஜாவின் மைதாமாவில் உள்ள நீதிமன்றில் ஆஜராகத்  தவறியமைக்காக நீதிபதி ஒலசம்போ குட்லக், அவர்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஐ.சி.பி.சி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.