10 கோடி நிதியுதவியை வைத்தியசாலைகளுக்கு வழங்கினார் மெஸ்ஸி!

14 May, 2020 | 09:12 AM
image

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இருந்து மீள்வதற்காக தனது நாட்டு வைத்தியசாலைகளுக்கு 5 இலட்சம்  யூரோவை நிதியுதவி அளித்துள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெய்ய் தலைசிறந்த பார்ஸிலோனா  கழக அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மெஸ்ஸி ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு   நிதியுதவி செய்துள்ளார்.

தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளது. அங்குள்ள வைத்தியசாலைகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன.

ஆகையால், மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக அங்குள்ள வைத்தியசாலைகளுக்கு லயனல் மெஸ்ஸி, 5 இலட்சம் யூரோ நிதியுதவி வழங்கியுள்ளார். இது இலங்கை மதிப்பில் சுமார் 10 கோடியே 11 இலட்சத்து 65 ஆயிரம் ஆகும்.

இதேவேளை, பார்ஸிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70 சதவீதத்தை விட்டுக்கொடுக்க தயார் என்று கூறிய மெஸ்ஸி, கழக உத்தியோகத்தர்களுக்கு 100 சதவீத சம்பளத்தை வழங்குவதற்கு உறுதியளிப்போம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right