பணிகளை ஆரம்பிக்கும் அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லிற்றோகேஸ் ஆகியவற்றுடன் இணைந்துகொள்ளும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இதற்காக 10,000 லீற்றர் மேற்பரப்பு தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள், சுகாதார திரவங்கள் ஆகியன காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்கேனவே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய காப்புறுதியாளர்களான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இலங்கை பெற்றோ லிய கூட்டுத்தாபனத்துடனும் லிற்றோகேசுடனும் இணைந்து நாட்டில் கொரோனாகிருமித் தொற்று பரம்பலை ஒழிக்கும் முயற்சியில் மாநகர சபைகள்ரூபவ் மாகாண சபைகள்ரூபவ் நகர சபைகள் போன்ற முகியமான அரசாங்க நிறுவனங்கள்ளுக்கு நாடுதழுவிய ரீதியில் விநியோகிப்பதற்காக 10.000 லீற்றர் மேற்பரப்புத்தொற்று நீக்கிகளை வழங்கியுள்ளது.

மேற்பரப்பு தொற்று நீக்கிகள்ரூபவ் கௌரவ அமைச்சர்கள் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் மே மாதம் 8ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

மேலும்ரூபவ் பொது மக்களுக்கு சேவை வழங்குவதில் முன்னணியில் விளங்கும் 10ரூபவ்400 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சுகாதார மற்றும் முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.

கொவிட் 19 கிருமித் தொற்றை ஒழிக்கும் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளிலும் சக்திவாய்ந்த பங்காளராக விளங்கும் இலங்கை காப்புறுதிக் கூடடுத்தாபனம் அரசாங்க துறை ஊழியர்களினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பையும் சேமநலனையும் உறுதிப் படுத்துவதற்கு உரியமுறையிலான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு மேற்படி அன்பளிப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

பெரும் கொள்ளை நோயான கொரோனா பரம்பலை தடுப்பதற்காக களத்தில் இறங்கி பாடுபடும் விசேட செயலணிப் படையினருக்கு 200 மில்லி லீற்றர் கொண்ட 10,000 கழிவு நீக்கி சுகாதார திரவ போத்தல்கள், கொவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகபாப்பு நிதியத்திற்கு 50 லட்சம் ரூபா அன்பளிப்பு கொரோனா பரம்பலை தடுப்பதற்கு முன்னணியில் போராடிவரும் அரசதுறை ஊழியர்களுக்கு 15 லட்சம் ரூயஅp;பா பெறுமதியான இலவச ஆயுட் காப்புறுதிக் காப்பீடு ஆகியவற்றையும் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது.

நாட்டின் தேசிய காப்புறுதியாளர்களான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் கொவிட் 19 கொள்ளை நோயிலிருந்து பொது மக்களையும் நாட்டைப் பாதுகாக்க முன்வந்துள்ள அரசாங்கதுறை ஊழியர்களையும் இலங்கை அரசாங்கத்தின் தேசிய திட்டங்களுக்கு உதவுவதற்குமான அதன் பாறுப்பை உணர்ந்து தனது கடமைகளை நிறைவேற்றும் பணியில் முன்னணியில் விளங்குகிறது.