பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானத்தால் உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் சுமார் மொத்தம் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை 'பிறிக்ஸிட்' என்ற மேற்படி வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் பிரகாரம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களான மைக்ரோ சொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ், அமேஸன் ஸ்தாபகர் ஜெப் பெஸொஸ், பிரித்தானியாவின் மிகப் பெரிய செல்வந்தரான ஜெரால்ட் குரொஸ்வெனர் ஆகியோர் இந்த 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பின் பெறுபேற்றையடுத்து முறையே 1.75  பில்லியன் ஸ்ரேலிங் பவுண், 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் மற்றும் 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் தொகையை இழந்துள்ளனர். 

அதேசமயம் ஐரோப்பாவின் மிகப் பெரிய செல்வந்தரான அமன்சியோ ஒர்ரேகா 4.4 ஸ்ரேலிங் பவுணையும் உலகின் மூன்றாவது செல்வந்தரான வரென் பவ்வெட் 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுணையும் இழந்துள்ளார். 

பிறிக்ஸிட்டால் பாதிக்கப்பட்ட செல்வந்தர்கள் 

பில் கேட்ஸ் 

சொத்து மதிப்பு: 61 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

இழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

அமன்சியோ ஒர்ரேகா 

சொத்து மதிப்பு: 51 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

இழப்பு: 4.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

வரென் பவ்வெட் 

சொத்து மதிப்பு: 48.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

இழப்பு: 1.7 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

ஜெப் பெஸொஸ் 

சொத்து மதிப்பு: 45 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

இழப்பு: 1.2 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

ஜெரால்ட் குரொஸ்வெனொர் 

சொத்து மதிப்பு: 9.4 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் 

இழப்பு: 730 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்