இரட்டைக் குட்டிகளை ஈன்ற பண்டா கரடி

Published By: Raam

27 Jun, 2016 | 05:59 PM
image

முன்னாள் போர்த்துக்கேய காலனி பிராந்தியமான மகாவுவிலுள்ள பண்டாக் கரடியொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. 

மேற்படி பண்டா கரடிக் குட்டிகள் அந்தப் பிராந்தியத்தில் பிறந்த முதலாவது பண்டாக் கரடிக் குட்டிகளாக விளங்குகின்றன. 

ஸின் ஸின் என்ற அந்த பெண் பண்டா கரடி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறை குறைந்த இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது. 

இதனையடுத்து அளவில் சிறிய அந்தக் குட்டிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தக் குட்டிகளின் தந்தை காய் காய் என்ற ஆண் பண்டா கரடியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right