பொதுத் தேர்தலை நடத்துவதற்கான செலவு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எவ்வாறு இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் நாம் காத்திருக்க வேண்டி வரும். எது எவ்வாறு இருப்பினும் எனக்குள்ள முதல் அக்கறை பொதுமக்களை பாதுகாப்பதாகும்.

இரண்டாவது அரச உத்தியோகத்தர்கள் . எமது ஆணைக்குழுவின், தேர்தல். திணைக்கள அதிகாரிகள் ஊழியர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய காரணிகளாகும். அதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக நாம் என்ன நடவடிக்கை எடுத்தாளும் அது சுகாதார வழிமுறைகளை பின்பற்றிய வகையிலேயே அமைய வேண்டும். நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் பூச்சியமாக மாறிவிட்டது என சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினால் தேர்தல் செலவுகள் இரண்டு மடங்காக அதிகரிகும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காகன செலவு சுமார் ரூபா 7 பில்லியனான மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கோவிட் -19 தொற்று காரணமாக முன்னெடுக்கப்பட வேண்டிய  கூடுதல் நடவடிக்கைகள் காரணமாக பொதுத் தேர்தலுக்கான செலவு இது ரூ .14 பில்லியனாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

34 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று ராஜகிரியாவில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதித்தனர். மேலும் 23 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவின்  இன்று சந்திக்கின்றது.