வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 129 பேர் விடுவிப்பு !

13 May, 2020 | 03:40 PM
image

வவுனியா பம்பைமடு கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கடற்படையினரின் குடும்பத்தினரில் 129 பேர் முகாமில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.  

இந்நிலையில் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 192 பேர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கொவிட் 19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 129பேர் இன்றையதினம் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

  

நாவலப்பிட்டி, அவிசாவளை, நுவரெலியா, கண்டி, குருணாகலை, மொனராகலை, கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.  

குறித்தமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 161 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதுடன்  மேலும் 31பேர் குறித்த முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08