எதிர்வரும் வாரத்தில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்த விரும்பும் நபர்கள் இன்று மாலை 6.00 மணிக்கு முன்னர் ரயில்வே திணைக்களத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பதிவுகளை இலங்கை ரயில்வே இணையத்தளத்தினூடாகவும் மேற்கொள்ள முடியும்.

ஆசனப் பதிவுகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே சேவைகளை முன்னெடுப்பதற்கான ரயில்களின் எண்ணிக்கையை  தீர்மானிக்க முடியும் என்றும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.