‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் வெளியீட்டு திகதியை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

இப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மூத்த நடிகைகளான குஷ்பூ, மீனா, நயன்தாரா, இளம் நடிகை கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, டி இமான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் படப்பிடிப்பு வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பேட்ட, தர்பார் ஆகிய படங்களைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ படமும் பொங்கலுக்கு வெளியாகிறது என்பதால், அவர்கள் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.