யாழ். காக்கைதீவு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் 140 கிராம் கஞ்சாவுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

நாவாந்துறை, சுதுமலை பகுதிகளைச் சேர்ந்த இருவரே மேற்படி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.