சுமந்திரன் - கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே முரண்பாடு ! சமரசத்திற்கு மாவை முயற்சி

12 May, 2020 | 09:46 PM
image

(ஆர்.யசி)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் குறித்து முன்வைத்த கருத்துகள் தொடர்பில் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் கூட்டமைப்பை சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கவுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்  விமர்சனக் கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் அக்கருத்து குறித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இடையிலேயே மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்துகொண்டு தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி கருத்துக்களை முன்வைப்பதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அக் கட்சியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எழுத்துமூல அறிக்கையொன்றையும் முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் முன்வைத்த கருத்து தனது சொந்தக் கருத்து, எனது நிலைப்பாட்டை கூறுவதற்கு நான் தயங்க வேண்டிய அவசியம் இல்லை, ஆயுத போராட்டம் என்ற கொள்கை எனக்கு பிடிக்காது என்றே கூறினேன், மாறாக விடுதலைப்புலிகளின் போராட்டம்  தவறு என்றோ, பிரபாகரன் தவறான கொள்கையை கொண்டவர் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை.

எனது கருத்து குறித்து நான் எந்தவித மாற்று நிலைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விடுதலைப்புலிகள் செய்த தியாகத்தை நான் மதிக்கிறேன். அதற்கான அதனை அரசியல் ஆயுதமாக கையில் எடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என சுமத்திரன் தான் முன்வைத்த கருத்து குறித்து விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.

எனினும் சுமந்திரனின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக் கருத்தாகும்.

அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரை அரசியல் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முடியாதுள்ளது, எனவே நிலைமைகள் வழமைக்கு வந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களையும் வரவழைத்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள  கருத்து முரண்பாடுகள் குறித்தும்,தேர்தல் காலம் என்ற காரணத்தினால் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் அடுத்த கட்ட வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

சுமத்திரன் நிதானமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டும், அதேபோல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதனை மக்களிடம் திரிபுபடுத்தாது கொண்டு செல்ல வேண்டும். எவ்வாறு இருப்பினும் கட்சி என்ற வகையில் சகல தரப்புடனும் இது குறித்து பேசி ஒரு நிலைப்பாட்டை எட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00