(நா.தனுஜா)

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டிய தேவையிருக்கும் சூழ்நிலையில், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே மிகவும் சவாலான விடயமென முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது குறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையிருக்கும் சூழ்நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் மக்களனைவரையும் சென்றடையக்கூடிய போதிய காலப்பகுதியையும் வாய்ப்பையும் வழங்கி, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே மிகவும் சவாலான விடயமாகும்.

இத்தகையதொரு சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு, ஏனைய தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு முக்கியமானதொரு தருணத்தைக் கையாள வேண்டிய பொறுப்பில் இருக்கிறது.