ஒரு மாதத்திற்கு மேலாக பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், நேற்று முதல்முறையாக வுஹானில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் வுஹான் நகரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாமல் இருந்து வந்தநிலையில் நேற்று அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Photo credit : AFP

மேலும் சீனாவில் கடந்த 10 நாட்களில் இல்லாத வகையில் இரண்டு இலக்க பாதிப்பு நேற்று உறுதியாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு சீனாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.

இதுவரை சீனாவில் 82,901 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,633 பேர் உயிரிழந்துள்ளனர்.