அமெரிக்காவில், இரண்டு  ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, வெள்ளை மாளிகை ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை ஊழியர்கள் இருக்கையில் அமரும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கா துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்தை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா.

இந்நிலையில், ரோஸ் கார்டனில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், முகக்கவசம் அணியாமலே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டொனால்ட் டிரம்ப். அவர், "நான் அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பதால் முகக்கவசம் அணிய தேவையில்லை," என தெரிவித்துள்ளார். அத்அதோடு, வெள்ளை மாளிகையில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று குறித்தும் மிக சாதாரணமாகவே பேசினார்.

மேலும், அவர் கூறுகையில், "ஒருவருக்குதான் கொரோனா. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கெல்லாம் நெகடிவ் என பரிசோதனை முடிவு வந்துள்ளது," எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, ஏப்ரல் மாதமே முகக்கவசம் குறித்து ஜனாதிபதி டிரம்ப் பேசியிருந்தார். அப்போது அவர் தாம் முகக்கவசம் அணிய விரும்பவில்லை என்றும், நான் பல்வேறு தரப்பினரை வெள்ளை மாளிகையில் சந்திப்பேன். பல்வேறு நாட்டு அதிபர்கள் முதல் அரசிகள் வரை சந்திப்பேன். அப்போது என்னை யாரும் முகக்கவசத்துடன்  சந்திப்பதை விரும்பவில்லை," என்று கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.