இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Digital Desk 3

11 May, 2020 | 08:15 PM
image

இராணுவ கோப்ரல் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) மாலை மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய இராணுவ படை முகாமில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதன் போது, படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள 4 ஆவது கெமுனு படைப்பிரிவில் கடமையாற்றிவரும் இரத்தினபுரியைச் சோந்த 23 வயதுடைய கோப்ரல் சம்பவதினமான இன்று மாலை 5.30 மணியளவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் அவர் படுகாயமடைந்து உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றதுடன் பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07