(செய்திப்பிரிவு)
நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றோடு தனியார் துறைகள் பலவும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இவ்வாறு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் அரச ஊழியர்கள் பலர் வீடுகளிலிருந்து பணியாற்றினர்.
இன்று திங்கட்கிழமை முதல் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுடன் அமைச்சுக்களின் அரச ஊழியர்கள் நிறுவனப் பிரதானிகளின் முழுமையாக வழிகாட்டல்களின் கீழ் சேவைக்கு வருகை தந்துள்ளனர்.
அதற்கமைய கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் கீழ் அழைக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் இன்றையதினம் பணிக்கு திரும்பியிருந்தனர்.
அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்காக அமைச்சினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய சுகாதார பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM