கண்பார்வை தினம் - 2016 ஐ முன்னெடுத்த Vision Care 

Published By: Priyatharshan

27 Jun, 2016 | 03:35 PM
image

கண்பார்வை பரிசோதனை நிபுணர்களுக்கு சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன், Vision Care இன் கல்வியகம் தனது கண்பார்வை தினம் மற்றும் 7 ஆவது வருடாந்த விஞ்ஞானவியல் அமர்வுகளை இம் மாதம் 12ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை முன்னெடுத்திருந்தது. 

“முழுத் தேசத்துக்கும் கண்பார்வை” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெற்றதுடன், பிராந்தியத்தின் வெவ்வேறு நிபுணர்களை ஒன்றிணைத்திருந்ததுடன், மாறிவரும் கண்பார்வை பரிசோதனை தொடர்பில் அறிவை பகிர்ந்திருந்தது.

தொடர்ச்சியான 7 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு,பாரம்பரிய மங்கல விளக்கேற்றல் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியிருந்ததுடன், பயிலும் நிலையிலுள்ள கண்பார்வை பரிசோதனை உதவியாளர்களின் வரவேற்பு நாட்டிய நிகழ்வும் நடைபெற்றது. 

Vision Care கல்வியகத்தின் அதிபர் வித்யா ஜயரத்ன வரவேற்புரையை நிகழ்த்தியிருந்ததுடன், பிரதான உரையை கண்பார்வை பரிசோதனை வைத்திய ஆலோசகர் வைத்தியர். மதுவந்தி திசாநாயக்க ஆற்றியிருந்தார்.

வாய்வழி வழங்கலுக்கான விருதை அமில சந்திரசேகர பெற்றுக் கொண்டதுடன், சிறந்த சுவரொட்டிக்கான விருதை டுலாஞ்ஞலி டி சில்வாவும், சிறந்த வாய்வழி வழங்கலுக்கான விருதை புத்தினி நோனிஸ்சும், சிறந்த ஆக்கபூர்வ ஆய்வுக்கான விருதை சூலங்க பெரேராவும், இந்த ஆண்டுக்கான தொகுப்பாளர்களாக கல்ப மதுசங்கவும், ஓசதி பீரிசும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Vision Care இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தசந்த ஃபொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,

“இந்த வருடாந்த நிகழ்வின் மூலமாக எமது மாணவர்கள் மத்தியில் அறிவை பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளதுடன் ஆய்வு பத்திரங்கள் அல்லது போஸ்டர்களை மாணவர்கள் மத்தியில் சமர்ப்பித்து ஏனையவர்களுடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. 

எமது இளம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த இளம் கண்பார்வை சிகிச்சை நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன், படக்கூடியதாக இருக்கும் என்பதுடன், எதிர்காலத்தில் சிறப்பான முறையில் பங்குபற்றக்கூடியதாக இருக்கும்” என்றார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரித்தானியாவின், கார்டிஃவ் பல்கலைக்கழகத்தின் கண்பார்வை பரிசோதனை மற்றும் பார்வை விஞ்ஞானவியல் கல்வியகத்தின் பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்கான பணிப்பாளர் வைத்தியர் பர்பரா ரயன் பங்குபற்றியிருந்ததுடன் சிறப்பு அதிதியாக கண்மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சம்ப்பா பனகல கலந்து கொண்டார். 

கண்பார்வை பரிசோதனை உதவியாளர்கள் மற்றும் வெளியிடல் கற்கைகளில் டிப்ளோமா மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுடன் இந்த மாநாடு ஆரம்பமாகியிருந்தது.

“கண்பார்வை குறைபாடுகளை கொண்டவர்களுக்கும் பொது கண்பரிசோதனைகளுக்கும் வருகை தருவோருக்கும் கண்பார்வை பரிசோதகர்களாகிய நாம் முதன் நிலை தொடர்பாளர்களாக அமைந்திருப்போம். சவால்கள் நிறைந்த சூழலில் சிறந்த தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு நவீன அறிவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி அவற்றை பகிர்ந்து கொள்வதற்கு இந்த மாநாடுகள் சிறந்த கட்டமைப்பாக உள்ளன. இன்றைய விஞ்ஞானவியல் அமர்வு என்பது கண்பார்வை பரிசோதனை தொடர்பில் அறிவை பெற்றுக் கொள்ளவும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்” என கண்பார்வை பரிசோதனை தினம் 2016 இன் தலைவர் சுலங்க பெரேரா தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் நான்கு விஞ்ஞானவியல் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் ‘Special testing and biometry’, ‘Refraction and low vision’, ‘Contact lenses and dispensing’,  மற்றும் ‘Hearing care’ ஆகியன அடங்கியிருந்தன. பலர் தமது விஞ்ஞானவியல் ஆய்வுப் பத்திரங்களை இதன் போது சமர்ப்பித்திருந்ததுடன், அனுபவம் வாய்ந்த நடுவர்களிடமிருந்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கல்வியகத்தின் விசேட ஆலோசகருமான கண்பார்வை சத்திரசிகிச்சை ஆலோசகரான வைத்தியர். மதுவந்தி திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

“Vision Care கல்வியகத்தின் மாணவர்களும் ஊழியர்களும் பல ஆண்டுகளாக முயற்சி செய்து, சர்வதேச தரத்துக்கு நிகராக கண்பார்வை பரிசோதனை மற்றும் பார்வை விஞ்ஞானவியல் கல்வி ஆகியவற்றில் முன்னோடிகளாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்த கல்விசார் செயலமர்வின் மூலமாக ஆய்வுகளை ஊக்குவிப்பது, கருத்துக்களை பகிர்தல் மற்றும் தகவல்களை பகிர்தல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

இந்நிகழ்வு மகிழ்ச்சியூட்டும் நாட்டியம், நடுவர்களின் கருத்துகள், விருதுகள் வழங்கும் நிகழ்வு மற்றும் Vision Care இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தசந்த ஃபொன்சேகாவின் உரை மற்றும் Vision Care கல்வியகத்தின் பரிசோதனை மற்றும் கற்கைகள் பணிப்பாளர் குமாரி ஃபொன்சேகாவின் நன்றி உரை ஆகியவற்றுடன் நிறைவடைந்தது. சிறந்த வாய்மூல சுவரொட்டி, சிறந்த கடதாசி சுவரொட்டி, புத்தாக்கமான கற்கை மற்றும் சுவரொட்டிக்கான வளர்ந்து வரும் தாக்கல் செய்பவர் ஆகியன விருதுகளில் அடங்கியிருந்தன. துறையில் ஈடுபாட்டை கொண்டிருப்பதற்கு இது மிகவும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட Vision Care Optical Services (Private) Limited இனால் உள்ளக ஊழியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் Vision Care கல்வியகத்தின் மூலமாக தகைமை வாய்ந்த, நவீன அறிவு படைத்த கண்பார்வை பரிசோதனை நிபுணர்களை உருவாக்க உதவியாக அமைந்துள்ளது. 

கல்வியகத்தினால் தற்போது ஒருவருட கால விசேடத்துவ கற்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் Diploma in Optometry, Certificate for Ophthalmic Assistants, Certificate in Dispensing Optics மற்றும் Certificate in Audiometry கற்கைகளையும் முன்னெடுக்கப்படுகின்றது. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பங்காளர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் இளமானி கற்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல ஆண்டு காலம் அதன் நம்பிக்கையை வென்ற நாமம் மற்றும் துறையில் தொடர்ச்சியான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றமைக்காக புகழ்பெற்ற Vision Care, கண் பராமரிப்பு மற்றும் கேட்டல் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது. இதற்காக தகைமை வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு நாடு முழுவதும் பரிபூரண கண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நவீன வசதிகளைப் பயன்படுத்துவதுடன் ஒரு கண்ணின் பார்வைத் திறன் மற்றும் ஆரோக்கிய நிலை ஆகியவற்றை இனங்காண்கிறது. கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள அதன் நவீன வசதிகள் படைத்த காட்சியறைக்கு மேலதிகமாக Vision Care நாடு முழுவதும் 34 கிளைகளைக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57