(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவை சட்ட ரீதியில் எதிர்க்கொள்ள தயார்.
பொதுத்தேர்தலுக்காக ஏற்றுக்கொண்ட வேட்புமனுவை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
பாராளுமன்றத்திற்கு மாத்திரமே அதிகாரம் உண்டு இதன் காரணமாகவே எதிர்தரப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அழுத்தம் பிரயோகிக்கின்றார்கள் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் முழுமையாக ஒழிக்கப்படவில்லை ஆகவே அந்த வைரஸ் தொற்றுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த முடியாது. நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். என்ற காரணத்தினால் பாதுகாப்பு அம்சங்களை மையப்படுத்தி ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
நெருக்கடியான நிலையில் எதிர்தரப்பினர் அரசியலமைப்பினை தொடர்புப்படுத்தி சிக்கல் நிலையினை தோற்றுவித்துள்ளார்கள்.
அரசியலமைப்பின் வரைபுக்கு உட்பட்டே ஜனாதிபதி கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தார். எதிர்தரப்பினர் தற்போது பல விடயங்களை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இந்த சவால்களையும் எதிர்க் கொள்ள தாயார்.
பல்வேறு அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு குறிப்பிடுகின்றார்கள்.
சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுத்தாக்கல் செல்லுப்படியற்றது என்ற கருத்தினை எதிர்தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். அங்கீகரிக்கப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடையாது.
பாராளுமன்றத்திற்கு மாத்திரமே இந்த அதிகாரம் உண்டு இதன் காரணமாக கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட எதிர்தரப்பினர் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.
அரசியலமைப்பின் 70(7) அத்தியாயத்தின் பிரகாரம் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உண்டு இவ்விடயத்தில் எவரும் ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது ஆகவே இதனை இனி சவாலுக்கு உட்படுத்த முடியாது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM