சரே கழகத்தின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கா தெரிவு

Published By: J.G.Stephan

11 May, 2020 | 05:21 PM
image

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் அணியான சரே பிராந்திய அணியின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவராக குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார்.

பிரித்தானியாவிலுன்ன 18 பிராந்திய அணிகளிலும் விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் அதிசிறந்த வீரர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் (பி.பி.சி) நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்புக்கு பி.பி.சி வானொலிச் சேவையில் கடமை புரிகின்ற ஊடகவியலாளர்களும், பிரித்தானிய உள்ளூர் வானொலி வர்ணனையாளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

பிரித்தானியாவிலுள்ள ஒவ்வொரு பிராந்திய கழகத்துக்குமாக தனித்தனியாக 4 வீரர்கள் குறும்பட்டியலிடப்பட்டனர்.



இதன்படி, பிராந்திய கழகமான சர்ரே அணிக்கான அதிசிறந்த வெளிநாட்டு வீரருக்கான விருதை 40 சதவீத வாக்குகளைப் பெற்ற குமார் சங்கக்கார பெற்றுக்கொண்டார்.

இந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் வீரர்களான சக்லைன் முஷ்தாக் 21 சதவீத வாக்குகளையும், இன்திஹாப் ஆலம் 20 சதவீத வாக்குகளையும் மேற்கிந்திய தீவுகளின் சில்வெஸ்டர் கிளார்க் 19 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான அரவிந்த டி சில்வா கென்ட் அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக இடம்பிடித்திருந்தார். 

அந்த அணியில் அவருடன் போட்டியிட்ட பாகிஸ்தான் வீரரான ஆசிப் இக்பால் 56 சதவீத வாக்குகளைப் பெற்று கென்ட் அணியின் அதிசிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

இங்கிலாந்தின் சொமர்செட்  மற்றும் கிளமோர்கன் ஆகிய இரண்டு பிராந்திய அணிகளின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவானான சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவாகியிருந்தமை விசேட அம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35